நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை 2 நாட்களுக்கு மூடுவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு இன்று (14-10-2024) மற்றும் நாளை (15-10-2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கொலன்னாவ மற்றும் கடுவலை கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளையும் நாளை மறுதினமும் மூடப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.