பாடத்தை கற்பிக்கும் போது 12 வயது பாடசாலை மாணவியின் மார்பகத்தை தொட்ட அதிபர் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அநுராதபுரம் நீதிமன்ற நீதிவானும் மேலதி நீதிவானுமான நாலக சஞ்சீவ ஜயசூரிய இந்த உத்தரவைா் பிறப்பித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஐம்பதாயிரம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் 12 வயது மாணவியின் மார்பகத்தை தொட்டு இந்த குற்றச் செயலை அவர் புரிந்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் 345 ஆம் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அதிபருக்கு எதிராக அனுராதபுரம் தலைமையகப் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட அதிபருக்கு மேற்படி தண்டனையை நீதிமன்றம் வித்துள்ளது.