அம்பலாங்கொடை பகுதியில் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கிய மாணவரின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது அறையில் இருந்த போது அவர் தம்மை தாக்கியதாக அந்த அதிபர் காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார்
இந்நிலையில் விளையாட்டு போட்டி ஒன்றின் போது தமது மகன் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதை அடுத்து குறித்த தந்தை அதிபரிடம் வினவுவதற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக தாக்குதலுக்கு இலக்கான மாணவன் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.