பாணந்துறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் , கணனி ஆய்வு கூடம் என்பவற்றுக்கு மாணவர்கள் இருவர் தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தில் கணினி ஆய்வகத்தில் இருந்த இருபதிற்கும் மேற்பட்ட கணினிகள், துணைக்கருவிகள், மின்விசிறிகள், ஏராளமான பாடப்புத்தகங்கள், அதிபரின் நாற்காலி மற்றும் பல கோப்பைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
8 மற்றும் 12 வயதுடைய மாணவர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாணவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருகையில்,
மாணவர் ஒருவர் அணிந்து வந்த கையுறை தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் தண்டனை வழங்கியுள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர் மற்றுமொரு மாணவனுடன் இணைந்து, குறித்த மாணவர் அதிபரின் நாற்காலிக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.00 மணியளவில் பாடசாலை ஒன்றில் தீ பரவியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீ விபத்தில் கணினி ஆய்வகத்தில் இருந்த இருபதிற்கும் மேற்பட்ட கணினிகள், துணைக்கருவிகள், மின்விசிறிகள், ஏராளமான பாடப்புத்தகங்கள், அதிபரின் நாற்காலி மற்றும் பல கோப்பைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்கள் இருவரும் அதிபரின் அறையில் இருந்த சாவியை எடுத்து ஏனைய வகுப்பறைகளை திறந்து உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.