7 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப் பொருட்களை வைத்திருந்த இராணுவ கிரிக்கெட் வீரர் உள்ளிட்ட மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கொஸ்கொட – கொடகம பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களிடம் இருந்து சுமார் 24 கிராம் ஹெரோயின் மற்றும் 23 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.