ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், அலரிமாளிகை மற்றும் அண்டை பிரதேசங்களை நோக்கி பல நபர்கள் பேரணியாக செல்வதை தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.