பெருந்தொகையான போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று காலி கடலில் கடற்படையினரால் கைது செய்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரம சூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (2024.01.05) காலை காலி கடலில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த பலநாள் கப்பலில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு தற்போது துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவிக்கையில்,
இதேவேளை, ரத்கம விதுரவின் போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது வெளிநாட்டில் உள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் வியாபாரியுமான ஒருவரை கைது செய்துள்ளனர்.
புஸ்ஸ – பிட்டிவல்ல பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடையவர் என தெரிவித்துள்ளனர்.