பரிசில் கிலோ கணக்கில் தங்கம் மீட்பு! இலங்கையர் ஒருவர் கைது! ஆதாரத்துடன் உரிமம் குறுபவர்க்கு தங்கம் ..!
பரிசில் இரகசிய அறை ஒன்றுக்குள் இருந்து கிலோ கணக்கில் தங்கம் மீட்கப்பட்டுள்ளது நேற்று புதன்கிழமை பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது ஒரு புகைப்பட கலையகம் ஒன்றின் பின் அறையில் தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே அவர்கள் குறித்த கலையகத்தினை அதிரடியாக சுற்றி வளைத்துள்ளனர் அங்கிருந்து தங்க ஆபரணங்கள் அதிக விலை கொண்ட ஆடம்பர கற்கள் கைக்கடிகாரங்கள் மற்றும் €100.000 யூரோவுக்கும் அதிகமான ரொக்கப்பணம் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.
இந்த பொருட்களின் உரிமையாளர் யார் என காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் முதல்கட்டமாக குறித்த கலையகத்தில் காவலரான பணிபுரிந்து வரும் இலங்கையைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் Oise நகரில் வசித்து வருகின்றதாக அறிய முடிகிறது.