தபால் திணைக்களத்தின் இணையதளத்தைப் போன்று வடிவமைக்கப்பட்ட 05 போலி இணையதளங்கள் நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இணையத்தளங்களில் சுமார் முப்பத்தைந்து பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனோபொல, தெரிவித்தார்.