தம்புத்தேகம குருகம பிரதேசத்தில் பட்டம் விடச் சென்ற சிறுவன் ஒருவன் கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
9 வயதுடைய சமீர பிரசாத் ரத்னாயக்க என்ற சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
நாள்தோறும் காலை வேளையில் பட்டம் விட வயல் வௌிக்கு செல்வதை வழமையாக கொண்டிருந்த சமீர வழமை போல இன்றும் சென்றுள்ளார்.
பிள்ளை பல மணி நேரமாகியும் வீடு வராததால் குழப்பமடைந்த பெற்றோர் அவரை தோடி சென்றுள்ள நிலையில், பட்டத்தின் நூலினை கண்டு உடனடியாக கிணற்றை சோதனை செய்தனர்.