ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் (Gotabaya Rajapaksa) கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அவரிடமிருந்து பட்டப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதை தவிர்த்து அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே..
மேலும் இதுகுறித்து முகநூலில் இலங்கையர் ஜீவன் பிரசாத் என்பவர் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒரு சிலர் இந்த படத்தை போட்டு ஒரு சமூகத்தை நக்கல் அடிக்கிறார்கள். அது நியாயமே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்,
இதை தவறாக சித்தரித்து அந்த மாணவர்களையோ அல்லது சமூகத்தையோ தவறாக சித்தரிக்க முற்படாதீர்கள். ஆரம்பத்தில் வந்த அநேக மாணவர்கள் ஆனந்த தேரரிடம் சான்றிதழை பெற்றுக் கொண்டார்கள்.
இடையில்தான் சான்றிதழை பெற்றுக் கொள்ளாது புறக்கணித்த நிகழ்வு நடந்தது. அதன்பின் வந்தோரில் அநேகர் புறக்கணிக்கத் தொடங்கினர். சிங்கள மாணவர்கள் செய்ததை சிறுபான்மையின மாணவர்கள் ஆரம்பித்திருந்தால், இந்நேரம் பல இடங்கள் கலவர பூமியாக மாறியிருக்கும்.
எத்தனையோ உயிர்கள் பலியாகியும் இருக்கும். பொதுவாகவே முதலில் யார் விசிலடிப்பது என்பதுதான் பிரச்சனை. ஒருத்தன் தொடங்கிவிட்டால் , பின்னால் தொடருவோர் கணக்கே இருக்காது. அதுதான் சமூக வழக்கம்.
கொத்து ரொட்டிக்கே கொலை செய்தவர்கள், இதை வைத்து எப்படி அரசியலாக்குவார்கள் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. என குறித்த நபர் முகநூலில் கருத்தை பதிவிட்டுள்ளார்.