கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளிப்படுத்தும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டதாரி எடுத்த நடவடிக்கைகள் மிகவும் முன்மாதிரியான செயலாக சிபாராட்டப்படுகின்றன.
தங்களுக்குப் பிடிக்காத ஒன்றை நியாயமாக நிராகரிக்கும் செயல் மிகவும் வெற்றியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.