கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என ஐ.தே.க வின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க ( Ranil Wickremesinghe) தெரிவித்துள்ள நிலையில் தற்போது ஓய்வூதியம் வழங்கக்கூட அரசாங்கத்திடம் பணம் இல்லையென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசின் பொருளாதார திட்டங்கள் கைவிடப்பட்டமையே தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். மாறாக முன்னைய அரசு 2019-இல் தனது பொருளாதார கொள்கையை மாற்றியதை தொடர்ந்தே பொருளாதார வீழ்ச்சி ஆரம்பமானது.
ஏனைய நாடுகளில் கொரோனாவால் உருவான பிரச்சினைகள் மாத்திரம் காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் கொரோனாவாலும் அரசாங்கத்தினாலும் ஏற்பட்ட பிரச்சினைகள் மாத்திரமே காணப்படுவதாக ரணில் (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
நேபாளத்தை விட இலங்கையின் வெளிநாட்டு நாணயக்கையிருப்பு குறைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.