சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பியோடிய நிலையில் ஒருவர் மீள கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த இரு சந்தேகநபர்களும் நேற்று புதன்கிழமை (31-08-2022) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை, நீதிமன்றம் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் நீதிமன்ற வளாகத்தில் சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர்.
தப்பியோடியவர்களை சிறைக்காவலர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து துரத்திய போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
தப்பி சென்றவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.