நாட்டில் சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிதகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 48,391 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தனமான நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே நீதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் மனைவி அல்லது குழந்தைகளுக்கான ஜீவனாம்சம் தொடர்பான 37, 514 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அதேசமயம் இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய தொகையாக கருதப்படுவதாகவும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டினார்