நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குறுகிய கால தேவைகளுக்கான டெண்டர் கோருவது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதன்படி நிலக்கரி கொள்வனவுக்கான குறுகிய கால தேவைக்கான டெண்டர்கள் சர்வதேச போட்டி விலைக்கு ஏற்ப நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத எந்தவொரு தரப்பினரும் இந்த விநியோகத்தில் பங்கேற்க முடியும் என்றும் 180 நாட்கள் குறைந்தபட்ச கடன் காலத்துடன் விநியோகம் முடிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீண்ட கால டெண்டரும் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.