நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொட நீரோடையின் மேல்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பில் எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சில நாட்களுக்கு முன் இறந்துள்ள நிலையில் சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.