நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நியூசிலாந்தின் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணியளவில் ரிக்டர் அளவில் 6.1ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
கேப்ரியல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்த நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த வாரம் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 40,000 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.