நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த விடயம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துப்பொருள் கொள்வனவிற்காக ஒரு பில்லியன் டொலர் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடாத்தியதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம் கடனாக பெற்றுக்கொள்ளும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
முதலில் ஒரு பில்லியன் டொலர் கிடைக்கப் பெறும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிதி உதவி பெற்றுக் கொள்வதற்கான இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நோக்கில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியா விஜயம் செய்ய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.