இலங்கையில் சுமார் 60 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர் என நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வெளிநாடு செல்ல தயாராகும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் மற்றும் படிக்கும் தமது பிள்ளைகளைப் பார்க்க, விடுமுறை நாட்களில் அந்த நாடுகளுக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றுமொரு குழு, தமது விடுமுறையை நுவரெலியாவில் கழிக்க திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெனரல் ஹவுஸ் (General House) என்ற விடுதியில் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.