தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் குறைவடைந்துவிடும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. 35 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியை செலவிட்டு, விடுவிக்கப்பட்டுள்ள கப்பலில் 37 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசல் தரையிறக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில தினங்களில் மேலும் ஒரு கப்பல் எரிபொருளுடன் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.