இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் நாட்டைவிட்டு மக்கள் வெளியேறுவதற்கு முயன்று வருகின்றனர். அந்தவகையில் கொழும்பு கடவுச்சீட்டு அலுவலகத்தில் நாளாந்தம் பெருமளவு மக்கள் குவிந்து வருகின்றனர்.
கடவுச்சீட்டினை பெறுவதற்கு அவர்கள் நீண் வரிசையில் காத்திருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நாளாந்தம் இப்படி சனம் கடவுச்சீட்டு எடுத்தால் 20 மில்லியனும் அதிகமான மக்கள் வெளிநாட்டுக்கு சென்றுவிம் நிலை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை அண்மைய நாட்களாக வடக்கு, கிழக்கு உள்ள மக்கள் தமிழகத்துக்கு சட்டவிரோதமாக சென்று தஞ்சமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.