நாட்டில் காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு ஊரடங்கை அமுல்படுத்துவது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சில அமைச்சர்கள் கேள்வியெழுப்பியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அமைச்சர்களின் கேள்விக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்மறையான பதில்களையே வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் வாரம் எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.