ஆளுநர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் ஜனாதிபதி மாளிகைக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.
விவசாயத்துறை, உணவு பாதுகாப்பு, பொதுமக்களுக்கான சேவையை செயற்திறனாக்குவதற்கு புதிய முறைகளை அறிமுகம் செய்தல், அனைத்து அரச சேவைகளையும் மாவட்டம் மற்றும் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கல் , அரசாங்க நிதி முகாமைத்துவம் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
வீட்டில் இருந்து பணியாற்றுதல், அனைத்து அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பரவலாக்கம் செய்வது காலத்தின் தேவை என ஜனாதிபதி இந்த கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார். மீள் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற இந்த கலந்துரையாடலுக்கு பொது நிர்வாகம் மற்றும் விவசாய அமைச்சுகளின் செயலாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதனிடையே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ , மத்திய வங்கி உள்ளிட்ட அரச வங்கிகளின் பல்வேறு தரப்பினரை அழைத்து அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று ஆராய்ந்துள்ளார்.
உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பதை தடுத்து, ஆலை உரிமையாளர்கள் பெருந்தொகை நெல்லை பதுக்கி வைப்பதை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டங்களை உருவாக்குவதாக இதன்போது பிரதமர் கூறியுள்ளார்.