நாட்டிலிருந்து தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால், அது குறித்த வருமானத்திலும் கணிசமான உயர்வு காணப்படுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் 1-ம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதனுடன் ஒப்பிடும் போது தனியார் தூதஞ்சல் (Courier) நிறுவனங்களின் தபால் கட்டணமும் அதிக விலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தபால் திணைக்களத்தின் ஊடாக அனுப்பப்படும் பொருட்களில் அதிகரிப்பு, ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கேற்ப வருமானம் அதிகரித்துள்ளதாகவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
எனினும் கூட, வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.