நாட்டின் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வடமேற்கு, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், கடும் வெயிலைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேலும் வெப்பமான காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.