நாட்டின் சில பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் பழுதடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக தேசிய கட்டமைப்பில் 270 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளரும் மேலதிக பொது முகாமையாளருமான அன்ரூ நவமணி குறிப்பிட்டார்.
அதேவேளை மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான டீசல் மற்றும் ஏனைய எரிபொருள் ஒன்றரை நாட்களுக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதென இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இந்த வாரம் நாளாந்த மின்னுகர்வு 100 மெகாவாட்டால் அதிகரித்துள்ளதனால் எரிபொருள் உரிய காலத்திற்குள் கிடைக்காவிடின், மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.