இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 23 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மே 25 ஆம் திகதி ஓய்வுபெறும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை இடம்பெறவுள்ளது.
26 ஆம் திகதிக்கு முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேரா தொடர்பான அனுதாபப் பிரேரணை ஒதுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றஅலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அடுத்த நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள மேற்படி அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.
இதற்கமைய எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.