நாடாளுமன்ற அமர்வுகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை மஹிந்த அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது.
இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதாநாத் காசிலிங்கம்,
மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் கூறப்படுவது போல் ஹெலிகொப்டரில் அவர் நாடாளுமன்றுக்கு வரவில்லை என்றும் சாலை வழியாகவே அவர் நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும் கூறினார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படம் பழையது என்றும் அவர் தெரிவித்துள்ளார்