கனடாவில் ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் பக்கத்தினுடான காதல் வலையில் சிக்கி பெருந்தொகையான பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் வாழ்ந்து வருவதாக கூறிய நபர் ஒருவர் குறித்த பெண்ணிடமிருந்து 95 ஆயிரம் டொலர் பணத்தை மோசடி செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண்ணை காதலித்த நபர், சிங்கப்பூரிலிருந்து கனடா வருவதற்கு பணம் இல்லை என அந்த பெண்ணிடமிருந்து பணத்தை கடனாக பெற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த நபர் முகநூல் பக்கத்தின் ஊடாக குறித்த நபர் நட்புறவானதாக தெரிவிக்கப்படுகிறது.
நாள்தோறும் தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த குறித்த நபர் தம்மை ஏமாற்றி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கின்றார்.