போக்குவரத்துக் பொலிஸார் இருவர் நடுவீதியில் நபர் ஒருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளான நபர் கேகாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் பணம் பறித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர் கேகாலை நிதஹஸ் மாவத்தையில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி பணம் பறிக்க முற்பட்ட போது பொலிஸாரால் அவர்மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறியுள்ளனர்.
அதோடு சந்தேகநபரால் தாக்கப்பட்ட வயோதிப பெண் தற்போது கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை குறித்த ஹபுதுகல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என கூறப்படும் நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.