உலகக் கிண்ண தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி சந்தித்த மோசமான தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மும்பையில் வங்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் (02-11-2023) இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களால் தோல்வியடைந்ததுடன், இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இதேவேளை, உலகக் கிண்ண வரலாற்றில் குறைந்த ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
இலங்கை அணியின் தொடர் படுதோல்விகளால் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், உரியவர்களுக்கு உரிய இடத்தை வழங்கி நிர்வாகத்தில் இருந்து விலகாமல் பொம்மைகள் போல் இருக்காமல் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர் பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.