நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலைக் காரணமாக பிரதான வீதி ஒன்றின் ஒரு பகுதி திடீரென தாழிறங்கியுள்ளது.
கினிகத்ஹேன பிரதேசத்தில் ஹட்டன் – கொழும்பு ஏ-07 பிரதான வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு தாழிறங்கியுள்ளது.
இதன் காரணமாக குறித்த இடத்தில் போக்குவரத்து ஒரு மருங்கிற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்ஹேன கோவிலை அண்மித்த பிரதான வீதியின் ஒரு பகுதி இவ்வாறு தாழிறங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (03) காலை 08 மணியளவில் இந்த தாழிறங்கல் ஆரம்பமானதாகவும், இதற்கு முன்பும் குறித்த இடத்தில் தாழிறக்கம் ஏற்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதியில் வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் இருக்குமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.