மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி யானை உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனகயா இரவு நேர அஞ்சல் தொடருந்தில் மோதியே இவ்வாறு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகந்த மற்றும் புனானை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் நேற்றிரவு இரவு 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் புளதிசி தொடருந்தில் மற்றொரு யானை மோதுண்டு இறந்ததாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.