ஜனாதிபதி தனது இருப்பதை தக்கவைத்துக்கொள்வதற்காகவே தமிழ் அமைப்புகளின் தடையை நீக்கியுள்ளார் என்றும், இது தேசத்துரோக செயலாகும் எனவும் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் குணதாச அமரசிங்க தெரிவித்தார்.
தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார். இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
6 அமைப்புகளுக்கான தடை நீக்கம்
டயஸ்போராவுடன் சம்பந்தப்பட்ட 6 அமைப்புகளுக்கான தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்திருக்கின்றார்.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது, மக்களின் நலன் கருதியோ நாட்டின் நன்மைக்கோ மேற்கொள்ளப்பட்டதல்ல எனவும் அவர் சாடினார்.
மாறாக அவரின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான விளையாட்டு என தெரிவித்த குணதாச அமரசிங்க , இதனை தாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் கூறினார்.