பெப்ரவரி மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் ரூபா மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது.
தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் 570 மில்லியன் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.