தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்துள்ளது.
கொட்டாவயிலிருந்து கெலனிகம நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
வேனில் சாரதி மட்டுமே பயணித்த நிலையில் அவர் வசமிருந்த ஒரு இலட்ச ரூபாயும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் வானின் சாரதிக்கு எந்தவிதமான காயங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக வீதியின் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அனைத்துள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.