நீண்ட நாட்களாக மீன்பிடி படகில் பயணித்த ஐந்து சந்தேக நபர்கள் 4000 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் பிரிவினரும் கடற்படையினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்தை இன்று (22.10.2023)வந்தடைந்த இந்த படகை சோதனையிட்ட போது, அதிலிருந்து சுமார் 200 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.