சிங்களச் சகோதர இன மக்களாகிய நீங்கள் உங்கள் பாரம்பரியப் பிரதேசத்தில் உங்கள் அரசியல்த் தலைவிதியை நீங்களே தீர்மானிப்பது போல், ஈழத் தமிழர்களும் அவர்களது மரபுவழித் தாயக பூமியில் விடுதலை பெற்ற இனமாகத் தங்கள் அரசியல்த் தலைவிதியைத் தாங்களே தீர்மானித்தவாறு வாழ வேண்டும் என்ற எண்ணம் உங்களில் மேலோங்க வேண்டும்.
இப்படியான எண்ணங்கொண்ட ஒரு புதிய தலைமையைத் தோற்றுவித்தால் மட்டுமே நாங்களும் நீங்களும் இலங்கைத் தீவில் நிம்மதியாக வாழமுடியும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு சிங்களச் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
‘இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியற்துறையின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்ட அறிக்கை,