இணையத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்கள் மூலம் அதிக தொகை தருவதாக கூறி பல பகுதிகளில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்தில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்யத்துள்ளனர்.
இது விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்குறித்த பெண் கொழும்பு ஜா-அல பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் தெரபிஸ்டாக பணிபுரிந்து வருகின்றார்.
41 வயதுடைய சந்தேகநபர் கடவன, சூரியகம பிரதேசத்தில் நிரந்தர வதிவிடப் பெண் எனவும், நுகேகொட நாவல வீதியில் வாடகை அடிப்படையில் பெற்ற வீட்டில் வைத்து இந்த பாரிய மோசடியை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பிரமிட் திட்டமாக இந்த வியாபாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உயர்மட்டத்தில் இருப்பவருக்கு அதிக பணம் கிடைக்கும் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இந்த சோயா பொருட்கள் பொதியிடுவதற்கு கையளிக்கப்பட்டுள்ளது.