யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து கனகசபை அவர்கள் 15-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற சிவகுரு, தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்குமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவஞானம், பாலசுந்தரம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணவதி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலாம்பிகை, பராசக்தி, தயாபதி, பரமேஸ்வரி, மங்கையற்கரசி, கௌரி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன், பரமகுருநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லத்துரை, கோபாலசிங்கம், ஜெயபாலசிங்கம், சண்முகநாதன், நிமலரட்ணம், ஜெயரங்கன், பிரபாகரன், தமிழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனேஸ், விஜிதா, சதீஸ், பிரகாஸ். லோயன், முகுந்தன், லாணி, நிரு, காலஞ்சென்ற பிரசாந், சிந்து, சுஜித், காவின், மெலானி, சர்மி, மிதுலன், தேனு, கீர்த்தி, கார்த்தி, சாயி, சங்கி, பிரணவன், மகேஷ், கிருத்திகா ஆகியோரின் பேரனும்,
மதனா, இஷா, கர்ஜித், நிருத்திகன், டினோசிகன். தஸ்மிதன், ஜெனித்தன், இனியன், ஆதித்யா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.