யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, Lusaka, Zambia, Gaborone, Botswana, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விமலகுமாரி மகேந்திரன் அவர்கள் 28-07-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துக்குமாரு அம்பலவாணர் ஆச்சிஅம்மை முத்துக்குமாரு தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி இராமநாதர் தங்கமுத்து சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
வித்யா, சத்யேஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுகன்யா கோடீஸ்வரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுமாரதாஸ், பாஸ்கரகுமார், உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முத்துப்பிள்ளை சிவகுமாரதாஸ், வரலக்ஷ்மி பாஸ்கரகுமார், விஜயலக்ஷ்மி உதயகுமார் , காலஞ்சென்றவர்களான திலகவதி தம்பிப்பிள்ளை, கமலாதேவி சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அவ்னி, கைலாஷ், இலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.