ஜெர்மனியின் ஹெம்பர்க் நகரில் உள்ள Jehovah´s Witness சமயத்தைச் சேர்ந்தோரால் பயன்படுத்தப்படும் கட்டடத்தினுள் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடந்திருக்கின்றது.
அதில் சிலர் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாக எப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என ஜேர்மனியின் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு (9 மார்ச்) நடந்த அந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்காரர் அல்லது தாக்குதல்காரர்கள் கட்டடத்தினுள் இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.