கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையின் போது, 51 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இச்சம்பவத்தில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று புதன்கிழமை (11-09-2024) அதிகாலை 05.25 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர் விமான நிலையத்தின் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு Green Channel ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது விமான நிலைய அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியில் இருந்து 34,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 172 சிகரெட்டு கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக 02 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.