ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதாகைகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படம் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் ஊடகவியலாளர் ஊடக சந்திப்புகளில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
முன்னதாக, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் முகங்கள் பொதுஜன பெரமுனவின் டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்பட்டது.
இருப்பினும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இதன்படி கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பாரிய மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி, தற்போது தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ளார்.