கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கெமராக்கள் திருடப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்றுமுன்தின இரவு (11) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை நூரானியா வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த மூன்று கெமராக்கள் திருடப்பட்டுள்ளன.
மாஸ்க் அணிந்து கொண்டு வந்த நபர் ஒருவர் குறித்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மூன்று கெமராக்களையும் திருடும் காட்சி பதிவாகியுள்ளது.
குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண வீட்டு உரிமையாளர்கள் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.