75வது சுதந்திர தினமான நேற்று (04) பிறந்து இரண்டு நாட்களே ஆன சிசு ஒன்று திருகோணமலை சர்தாபுர வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கிராம மக்களால் மீட்கப்பட்டுள்ளது.
குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதையடுத்து கிராம மக்கள் தேடியபோது குழந்தை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர், குழந்தை பொலிசில் ஒப்படைக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
கனமழையின் போது குழந்தையின் ஆடைகளை அகற்றி வீதியில் போட்டுவிட்டு சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.