யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், நெஞ்சு வலியால் அவதிப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வியாழக்கிழமை (13-07-2023) மாலை கொண்டு செல்லப்பட்ட போதே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, சீனங்குடா, சின்னப்பிள்ளை சேனையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 44 வயது தௌப்பிக் முகமட் தாரிஸ் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் அட்டை தொழிலை மேற்கொண்டு வரும் அவர் நேற்றைய தினம் தெல்லிப்பழை நோக்கி மோட்டார் சைக்கிள் சைக்கிளில் நண்பருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சடலம் பருத்தித்துறை வைத்தியசாலைக்கு இன்று வெள்ளிக்கிழமை (14-07-2023) எடுத்து வரப்பட்டது.
இந்த நிலையில் அங்கு பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.