தெல்கொல்ல பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதியே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மகவெல, தெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான விஜேரத்ன என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் எனவும் இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாத்தளை பதில் மாஜிஸ்திரேட் நீதவான் ஹிரந்த இந்தமல்கொட சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை மேற்கொண்டார்