8 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயாரின் இரண்டாவது கணவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவ, ராவத்தவத்தை, பொல்கொடுவ வீதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் சமிந்த குமார (44) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி ஆசிரியரிடம் கூறிய தகவல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுமி மாலை ஆங்கில வகுப்புக்கு சென்றபோது, உடலில் கடுமையான வலி இருப்பதாக ஆசிரியரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து , ஆசிரியர் இது குறித்து சிறுமியின் தாயாரிடம் தெரிவித்து சிறுமிக்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார். அதன் பின்னர், சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த தாய், நோய்க்கான காரணங்களை கேட்டறிந்த போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (21) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.